Oppo நிறுவனத்தின் புத்தம் புதிய ஆன்ட்ராய்டு கைப்பேசிகள் அறிமுகம்

300
Oppo நிறுவனம் Oppo R9 மற்றும் R9 Plus ஆகிய இரண்டு ஆன்ட்ராய்டு கைப்பேசிகளை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.Oppo R9 கைப்பேசி 5.5 இன்ச் தொடுதிரை, 1920 x 1080 பிக்சல் மற்றும் Mediatek Helio P10 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும், 4GB RAM, 64GB விரிவாகக்கூடிய சேமிப்பு வசதியும், மைக்ரோ SD அட்டை வழியாக உள்ளடங்கிய சேமிப்பு வசதியாக 128GB உள்ளது.

இதன் முன்புற கமெரா 16 மெகாபிக்சல் மற்றும் பின்புற கமெரா 13 மெகாபிக்சல் வசதி கொண்டது, இதன் பேட்டரி திறன் 2850 mAh கொண்டது.

Oppo R9 Plus கைப்பேசியானது, 6 இன்ச் தொடுதிரை, இதன் தீர்மானமாக 1920 x 1080 பிக்சல் கொண்டது.

Qualcomm Snapdragon 652 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது, மேலும், 4GB RAM, 64GB விரிவாகக்கூடிய சேமிப்பு வசதியும், மைக்ரோ SD அட்டை வழியாக உள்ளடங்கிய சேமிப்பு வசதியாக 128GB உள்ளது.

16 megapixel முன்புற கமெரா வசதி, 16 மெகாபிக்சல் பின்புற கமெரா வசதி கொண்டது. இதன் பேட்டரி திறன் 4120 mAh ஆகும்.

இரண்டு கைப்பேசிகளும் Android Lollipop – யினை தழுவிய 3.0 இயங்குதளத்தினை கொண்டது.

SHARE