அதிகூடிய சேமிப்பு நினைவகத்துடன் அறிமுகமாகவிருக்கும் ஸ்மார்ட் கைப்பேசி

294
சம்சுங் நிறுவனமானது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் பல தொழில்நுட்ப புரட்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இதன் மற்றொரு அங்கமாக தற்போது 256GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட Galaxy Note 6 ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைக்கவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை கடந்த மாதம் வெளியிட்டுள்ளது.

இச் சேமிப்பு சாதனமானது செக்கனுக்கு 850 MB எனும் வேகத்தில் தரவுகளை வாசிக்கக்கூடியதாகவும், செக்கனுக்கு 250 MB எனும் வேகத்தில் தரவுகளை பதிவு செய்யக்கூடியதாகவும் இருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த Galaxy Note 6 ஸ்மார்ட் கைப்பேசியினை இவ்வருட இறுதியில் சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE