கடந்த 2012ம் ஆண்டு மைக்ரோசொப்ட் நிறுவுனர் பில்கேட்ஸ் தனது மெலின்டா கேட்ஸ் பவுண்டேசன் ஊடாக Nano Membrane கழிப்பறையினை உருவாக்கும் முயற்சியினை ஆரம்பித்து வைத்தார்.Cranfield பல்கலைக் கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத் திட்டத்திற்காக சுமார் 710,000 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஐந்து வருடங்களின் பின்னர் தற்போது குறித்த முயற்சி வெற்றியளித்துள்ளது. நீர் இன்றி செயற்படக்கூடிய இந்த கழிப்பறை ஆனது மனிதக் கழிவிலிருந்து சக்திகளை பிறப்பிக்கவல்லது. மிகவும் மலிவான விலையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கழிப்பறை ஆனது நீண்ட காலம் பயன்படுத்தக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மார்ச் 22ம் உலக நீர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் உலகெங்கிலும் 2.4 பில்லியன் மக்கள் நீர் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், இவ்வாறானவர்களுக்கு இந்த நவீன கழிப்பறைகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. |