ப்ளூட்டோவின் மேற்பரப்பில் உறைந்த நிலையில் ஏரி

283
செவ்வாய் கிரகத்தில் மும்முரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் நாசா நிறுவனம், ஏனைய கிரங்களினையும் ஆய்வுக்குட்படுத்தி வருகின்றது.இதன் பயனாக ப்ளூட்டோ கிரகத்தின் மேற்பரப்பில் உறைந்த நிலையில் ஏரி இருப்பது போன்ற ஒரு புகைப்படம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இதனை உறுதிப்படுத்த முடியாத நிலையில் தொடர்ச்சியாக குறித்த ஏரி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதேவேளை சூரியனிலிருந்து பல பில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் ப்ளூட்டோவின் ஒழுக்கு காணப்படுவதனால் இங்கு -229 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே காணப்படுகின்றது. இதன் காரணமாக ஏரியிலுள்ள நீர் உறைந்திருக்காலம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க சுமார் 800,000 வருடங்களுக்கு முன்னர் ப்ளூட்டோவின் அச்சானது 103 டிகிரி சாய்வினை எட்டியிருந்தது என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதன் காரணமாக அங்கு கால நிலை மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE