பேஸ்புக் மூலம் 3 குழந்தைகளை கடத்த திட்டம் தீட்டிய இளம்பெண்கள்

304
பிரித்தானிய நாட்டில் பேஸ்புக் மூலம் 3 குழந்தைகளை கடத்த திட்டம் தீட்டிய 2 இளம்பெண்களை குழந்தையின் தாயார் ஒருவரின் உதவியுடன் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.இங்கிலாந்தில் உள்ள Wellingborough நகரை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத 17 மற்றும் 18 வயதுடையை இரண்டு பெண்கள் பேஸ்புக்கில் போலி கணக்குகளை(Fake profile) தொடங்கி Derbyshire நகரில் உள்ள தாயார் ஒருவரை தொடர்புக்கொண்டுள்ளனர்.

‘நாங்கள் சமூக சேவகர்கள் என்றும், உங்கள் முகவரி கொடுத்தால் உங்களுடைய குழந்தைக்கு இலவச உடுப்புகளை நேரிலேயே வந்து கொடுப்போம்’ எனக்கூறியுள்ளனர்.

இதனை உண்மை என நம்பிய அந்த தாயார் தனது முகவரியை கொடுத்துள்ளார். முகவரியை பெற்ற இரண்டு பெண்களில் ஒருவர் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

குழந்தையை பார்த்ததும் ‘நாங்கள் மருத்துவ முகாம் ஒன்றை நடத்தி வருகிறோம். உங்கள் குழந்தையை என்னிடம் கொடுத்து அனுப்பினால், அதற்கு மருத்துவ பரிசோதனை செய்து முடித்துவிட்டு உங்களிடமே திருப்பி அளித்துவிடுகிறேன்’ என அந்த பெண் கூறியுள்ளார்.

பெண்ணின் வார்த்தைகளால் சந்தேகம் அடைந்த தாயார் அவருக்கு தெரியாமல் பொலிசாருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார் பெண்ணை கைது செய்தபோது, ‘நான் கர்ப்பிணியாக இருக்கிறேன். என்னை கைது செய்து வேதனைப் படுத்தாதீர்கள்’ என பொலிசாரிடம் அந்த பெண் கெஞ்சியுள்ளார்.

ஆனால், மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கர்ப்பிணியாக நாடகமாடியது தெரியவந்தது. பெண்ணிடம் நடத்திய விசாரணையில் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் பேசிபோது, ‘இதே பகுதியில் 3 குழந்தைகளை கடத்த இருவரும் முயற்சி செய்துள்ளனர். அதாவது, இறுதியாக ஒரு குழந்தையை கடத்திச் சென்று தன்னுடைய சொந்த குழந்தை என கூறுவதற்காக இவ்வாறு கடத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 1-ம் திகதி நடந்த இந்த குற்றம் தொடர்பாக இரு பெண்களுக்கும் எதிர்வரும் மே 20-ம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

SHARE