இயக்குனர் தனுஷுக்காக பாடல் எழுதியுள்ளார்.

473

தமிழ் சினிமாவில் கவிஞர்கள் மட்டுமின்றி இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர்கள் வரை பாடல் எழுத ஆரம்பித்துவிட்டனர். இதில் புதிதாக தான் வேலை செய்யாத ஒரு படத்திற்காக ஒரு இயக்குனர் பாடல் எழுதியுள்ளார்.

அதுவேறு யாரும் இல்லை, சில வருடங்களுக்கு முன் சிவாவை வைத்து மாபெரும் வெற்றிபடம் கொடுத்த ‘தமிழ்படம்’ இயக்குனர் அமுதன் தான். தற்போது தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தில் ஒரு பாடல் எழுதவுள்ளார். இதை அவரே தன் டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் ‘ நான் முதன் முறையாக மற்ற இயக்குனரின் படத்தில் பாடல் எழுதியிடுக்கிறேன், இப்பாடல் கண்டிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும், குறிப்பாக ஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு பிடித்த பாடலாக அமையும்’ என தெரிவித்துள்ளார்.

 

SHARE