அதிர்ச்சி தகவல் – உலகில் ஏலியன் கண்டுபிடிக்கப்பட்டது

293

உண்மையில் ஏலியன்கள் இருக்கின்றதா, என்ற நீண்ட நாள் கேள்விக்கு தற்சமயம் பதில் கிடைத்திருக்கின்றது. ஏலியன்கள் உண்மையில் உலகில் வாழ்ந்து வருவதாக யுஎஃப்ஓ சதி கோட்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு தகவல் மிக வேகமாக பரவி வருகின்றது. இது குறித்த விரிவான தகவல்கள் இதோ உங்களுக்காக…

ஏலியன் வகை

பிலெய்டன் என அழைக்கப்படும் ஏலியன்கள் வடமேற்கு அர்ஜென்டினாவில் இருந்து 70 மைல் தூரத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யுஎஃப்ஓ சார்ந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரிவு

சால்டா பகுதியின் செய்திகளில் அர்ஜென்டினாவில் மொத்தம் 30 பிரிவினர் இருப்பதாகவும் அவர்கள் தங்களது பரிணாம வட்டத்தின் இறுதியை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சாத்தியம்

பிலெய்டன் பேஸ் காச்சி, லா போமா, ரூட் 40 இடையே இருக்கலாம் என்றும், இதன் மற்ற பிரிவினர் பிரபஞ்சத்தின் மூலைகளில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

மறைவு

இதன் முக்கிய தளமானது வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளில் மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து

இது குறித்து ஸ்காட் வாரிங் கூறும் போது, பிலெய்டன்கள் நார்டிக் ஏலியன் என கூறப்படுவதாகவும், இவை பார்க்க மனிதர்களை போன்றிருக்கும் ஏலியன்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு

இவ்வகை ஏலியன்கள் உலகம் மற்றும் நமது எதிர்காலத்தில் அதிக அக்கறை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நம்பிக்கை

ஸ்கான்டிநாவியன் மற்றும் கருப்பு தோல் கொண்ட பிலெய்டன்கள் உயரகமாகவும், ஒல்லியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

பால் வழி

பால் வழியின் வெளியே இருக்கும் லைரா எனும் கிரகத்தில் இருந்து பிலெய்டன்கள் இறங்கி வந்திருப்பதாக யுஎஃப்ஓ நிபுநர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE