நாஜி ஆதரவாளர் ஒருவர் மைதானத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

514
 

ஜேர்மனி- கானா போட்டியின் போது நாஜி ஆதரவாளர் ஒருவர் மைதானத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டை இல்லாமல் உடல் முழுவதும் பச்சை குத்திய நிலையில் நுழைந்த அவரால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.

அவரது உடம்பில் எச்எச் என்றும் எஸ்எஸ் என்றும் எழுதப்பட்டிருந்தது. எச்எச் என்றால் ’ஹெய்ல் ஹிட்லர்’ அதாவது ’வாழ்க ஹிட்லர்’ என்று பொருள்.

அதேபோல நாஜிக்களின் புற ராணுவப் படையைக் குறிக்கும் வாசகம் தான் இந்த எஸ்எஸ்.

மேலும் அவரது உடலில் ஹிட்லர் ஆதரவு வாசகம் தவிர ஒரு இமெயில் முகவரி, தொலைபேசி எண், போலந்து தொலைபேசி கோட் எண் ஆகியவையும் எழுதப்பட்டிருந்தது.

பின்னர் கானா வீரர் சுல்லிமுன்டாரி அந்த நபரை அங்கிருந்து போகுமாறு கூறினார். அதற்குள் பாதுகாவலர்கள் வந்து அந்த நபரை அப்புறப்படுத்திச் சென்றனர்.

இந்த நபரின் குறுக்கீட்டால் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இது குறித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்து வருகிறது.

SHARE