நாம் எடுத்துக்கொள்ளும் சிலவகை உணவுகளால் நம் உடலில் இருந்து நீர் அதிகளவில் வெளியேறுகிறது.அதுவும், கோடைகாலங்களில் காரமான உணவுளை எடுத்துக்கொண்டால், உங்கள் உடல் வளர்ச்சியடைந்து விபரீதங்களை சந்திக்க நேரிடும்.
சோடாக்கள் ஜிம் செல்வோர் தாகத்தைத் தணிப்பதற்கு அதிகம் எடுக்கும் ஓர் பானம் தான் சோடாக்கள். ல் உடல் ஆற்றலை அதிகரிக்கும் பானம் என்று சொல்லி விற்கப்படும் இந்த பானத்தை அதிகம் குடிப்பதால் உடல் வறட்சி தான் உண்டாகும். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, குடலில் ஆஸ்மாடிக் அழுத்தத்தை அதிகரித்து, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தும். கார்போஹைட்ரேட் உணவுகள் எடையைக் குறைக்க நினைப்போர் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளைத் தான் அதிகம் உண்போம். ஆனால் இப்படி கார்போஹைட்ரேட் குறைவான டயட்டை அதிகம் மேற்கொண்டால் உடல் வறட்சி தான் ஏற்படும். ஏனெனில் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளில் பொட்டாசியம் அதிகம் இருக்கும். இது நீர் இழப்பை உண்டாக்கும். எனவே நீங்கள் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை அதிகம் எடுப்பவராயின், குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். புரோட்டின் உணவுகள் உடல் வறட்சியை ஏற்படுத்தும் விடயங்களில் புரோட்டின் உணவுகளை அதிகமான அளவில் எடுப்பதும் ஒன்று. எப்போதும் நாம் எடுக்கும் கார்போஹைட்ரேட்டிற்கு இணையான அளவில் தான் புரோட்டீனை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடல் வறட்சியை அதிகரிக்கும். குறிப்பாக புரோட்டின் பானங்களை அதிகம் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்படி குடித்தாலும், குடிக்கும் நீரின் அளவை இரட்டிப்பாக்க வேண்டும். காபி காபியும் சிறுநீர் பெருக்கியாகும். அளவுக்கு அதிகமாக காபி குடித்தால், அதனால் உடலில் இருந்து நீர் வெளியேறி, உடல் வறட்சி, தலைவலி போன்றவை ஏற்படும். எனவே ஒரு நாளைக்கு 1-2 கப் காபிக்கு மேல் குடிக்காதீர்கள். உப்பு மற்றும் கார உணவுகள் அதிகப்படியான சோடியம் உடலில் தக்கவைக்கப்படும் நீரின் அளவில் இடையூறை உண்டாக்கி, உடல் வறட்சியை ஏற்படுத்தும். எனவே உப்புள்ள உணவுகளை அதிகமாக எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். அதுபோன்று கார உணவுகளையும் தவிருங்கள். |