பிரித்தானியாவில் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்த மூன்று இளைஞர்கள் முதியவர் ஒருவரை தாக்கியும், ஒழுங்காக பராமரிக்க மறுத்ததற்காகவும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வடக்கு சோமர்சடில் உள்ள முதியோர் இல்லத்தில் க்ளேடிஸ் ரைட் (79) என்ற மூதாட்டி டேமென்சியா நோயால் பாதிக்கபட்டு வந்துள்ளார்.
இவரை பாதுகாக்கவும், உதவிகளை செய்யவும் மூன்று இளைஞர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில், டேனியல் பேன்ஸ் (25), தாமஸ் (24) மற்றும் சால்னிகோ ஆகிய மூன்று இளைஞர்களும் மூதாட்டியின் கழுத்தை பிடித்து தாக்கி, தகாத வார்தைகளால் திட்டியுள்ளனர்.
இது ரைட்டின் மகன் ஜேம்ஸ் பொருத்தி வைத்துள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து பிரிஸ்டல் கிரவின் நீதிமன்றம், பேன்ஸ் இதுவரை மூன்று முறை இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டதால், இவரை 2 ஆண்டுகள் பணியில் இருந்து நீக்கவும், 4 மாதங்கள் சிறை தண்டனையும் அளித்துள்ளது.
மேலும் சால்னிகோ படுக்கை மாற்றும் போது ரைட்டை கழுத்தை பிடித்து தள்ளிவிட்டதற்காக 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. தாமஸ் 180 மணி நேரம் ஊதியம் இல்லாமல் வேலை பார்க்கவும் உத்தரவிட்டுள்ளது.
இது போன்ற செயல்கள் மனிதாபிமானமற்றது என்று நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.