குழந்தைகள் பிறந்து ஒரு வருட காலத்தினுள்ளேயே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதும், கடுமையாக தொற்றக்கூடியதுமான ரோட்டா (Rotavirus) வைரசுக்கான தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினை உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்தவல்ல இந்த வைரஸினை கட்டுப்படுத்தக்கூடிய குறித்த தடுப்பு மருந்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சுகாதார அமைச்சர் ஜே.பி.நாடா தலைமையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் “இந்த தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்வதன் ஊடாக இந்தியாவிலுள்ள சுமார் 27 மில்லியன் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும்” என குறிப்பிட்டுள்ளார். இம் மருத்தானது அடுத்த கட்டமாக ஒடிசா, இமாச்சில் பிரதேசம், ஹரியானா மற்றும் ஆந்திரா பிரதேசம் என்பவற்றில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இந்த வைரஸ் தாக்கத்தினால் உலகெங்கிலும் 453,000 குழந்தைகள் ஆண்டு தோறும் இறப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. |