இலகுவாக நகர்வதற்கு இதோ வந்துவிட்டது அதி நவீன சாதனம் (வீடியோ இணைப்பு)

301
என்னதான் நடப்பதும், ஓடுவதும் உடலுக்கு சிறந்த ஆரோக்கியம் என்று எவ்வளவு எடுத்துக் கூறினாலும் நவீன தொழில்நுட்பங்களின் பயனாக உருவான சாதனங்களை பயன்படுத்துவதற்கு மனிதர்கள் பின்னடிப்பதில்லை.இவ்வாறு இலகுவாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நகர்வதற்கு உருவாக்கப்பட்ட Folding Bikes, Scooters, One Wheelers, Skateboards போன்றவற்றிற்கு சவால் விடும் வகையில் மற்றுமொரு நவீன சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

முற்றுமுழுதாக இலத்திரனியல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இச் சாதனத்தில் காலணியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் தரப்பட்டுள்ள 26 V/26 Ah Li-ion மின்கலத்தின் உதவியுடன் மணிக்கு 15 கிலோ மீற்றர்கள் எனும் உச்ச வேகத்தில் 20 கிலோ மீற்றர்கள் வரைக்கும் பயணிக்க முடியும் என்பது விசேட அம்சமாகும்.

இதன் விலையானது ஏறத்தாழ 1,400 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE