கருணாநிதி ஜெயலலிதாவிற்கு பதிலடி.

493

 

பாலாறு நதிநீர் பிரச்சனையில் தன் மீது கோபம் கொள்வது ஏன் என தமிழக முதல்வர் ஜெயலிலதாவிடம் கருணாநிதி கேட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாறு நதிநீர் பிரச்னை பற்றி, சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதற்கு, விளக்கமளித்து அறிக்கை ஒன்றை கொடுத்தேன். எனினும் அதில் ஜெயலலிதாவை விமர்சித்து ஏதும் கூறப்படவில்லை.

இதற்கு அவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, உறவுக்கு கை கொடுப்பதும், ஆட்சி அதிகாரம் இல்லாதபோது, உரிமைக்கு குரல் கொடுப்பது போல் நடிப்பதும், கருணாநிதிக்கு கைவந்த கலை என்று என்னை தாக்கி பேசியுள்ளார்.

பாலாற்றில் அணை கட்டுவது பற்றி, சந்திரபாபு நாயுடு பேசிய தகவல், பத்திரிகைகளில் செய்தியாக வந்தவுடன், உயர் அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசித்து விடுத்த அறிக்கை ஏதேனும் பத்திரிக்கைகளில் வெளிவந்ததா?

ஆனால் அப்பிரச்சனைக்காக நான் விடுத்த அறிக்கை மட்டும் பத்திரிக்கைகளால் பரபரப்பாக பேசப்பட்டது.

இதன்பின் மீண்டும் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவசர அவசரமாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இவ்வாறு ஜெயலலிதா என் மீது தேவையில்லாமல் அறிக்கை விடுத்து என்னை பாய்ந்து பிறண்டுவதால் ஒன்றும் பயனில்லை என அவர் கூறியுள்ளார்.

SHARE