சம்பூர் வீதியின் நிர்மாணப் பணிகள் கடற்படையினர் வசம்: வர்த்தக சமேளனம் விசனம்

424

கிழக்கு மாகாணத்திலுள்ள வர்த்தகர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிழக்கு மாகாண வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர் கே.குலதீபன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வர்த்தகச் சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வுக்கான ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல், நேற்று திருகோணமலை ஜேக்கப் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு, ஒன்றிணைந்து முடிவெடுத்தே கிழக்கு மாகாண வர்த்தக சம்மேளனத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் வர்த்தகர்கள், ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்டோர், பல்வேறு வழிகளில் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

வெளிமாகாணத்திலிருந்து வருகை தந்து தொழில்களை மேற்கொள்வது மற்றும் வெளியாட்கள் ஒப்பந்தங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம் எனவும் குறிப்பாக தற்போதைய அரசினால் பரவலாக பாதுகாப்பு படையினரைக்கொண்டு பலதரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் தாம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

குறிப்பாக சாம்பூர் பிரதான வீதியின் நிர்மாணப்பணிகள் கடற் படையினரால் முன்னெடுக்கப்படுகின்றமையினை இதன்போது சுட்டிக் காட்டினார்.

அத்துடன் திருகோணமலை நகரில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்களில் தம்மையும் இணைத்து செயற்படுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

SHARE