படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போன போராளிகளின் நிலை என்ன?-அனந்தி சசிதரன்

754

 

இறுதிப்போரில் படையினரி டம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணா மல் போனவர்களது நிலை என்ன? போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளை முன்வைத்து, அவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமா காணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலை யில் பெருமளவு மக்கள் தங்கள் உறவினர்களை படையினரிடம் நேர டியாகவே ஒப்படைத்தனர்.

ஆனால் அவர்கள் எவரும் தற்போது இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனையும் இலங்கை அரசாங்கம் தெரிவிக்க மறுத்து வருவதுடன், காணா மல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்கவே நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

srilanka

இந்நிலையில் காணா மல் போனவர்களின் உறவினர்கள் வாழ்வாதார நெருக்கடி, சமூக நெருக்கடி உள்ளிட்ட நெருக்கடிகளால் இயலாமைகளுடன் அவலவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே அவற்றை சர்வதேசத்தின் கவனத்திற்கு வெளிப்படுத்தும் வகை யிலும், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் காணா மல் போனவர்களின் உறவினர்கள் 12பேர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணைகள் நடைபெற்ற நிலையில், அதற்குப் பலம் சேர்க்கும் வகையிலும் இந்த போராட்டத்தை நாங்கள் திட்டமிட்டு நடத்த ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்த போதிலும், இதனை தடுக்கும் நோக்கில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் அரசியல் வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள் கடந்து இதனை ஒரு இனத்தின் பிரச்சினையாகவும், மனிதாபிமானப் பிரச்சினையாகவும் கருத்தில் கொண்டு, தமிழ் தேசிய கட்சிகள், மனிதவுரிமை அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன இவ்விடயத்தில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

குறித்த போராட்டம் முல்லை மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை 9மணி தொடக்கம் 11மணி வரையில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை, அக்கூட்டம் அரச படைக ளால் குழப்பப்பட்டது. இவை இவ்வாறிருப்பினும் உண்மையில் இப்போராளிகள் சரணடைந்தார்களா? அல்லது போர்க்களத்தில் இறந்தார்களா? என்பது பற்றி விசாரிக்க வேண்டிய பொறுப்பு அரசி டம் இருக்கின்றது.

அதன்படி பார்க்கின்றபொழுது, விடுதலைப்புலிகளின் இளங்குமரன், ஈரோஸ் தலைவர் பாலகுமார், முன்னாள் அரசியற்துறை பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி, முன்னாள் அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கரி காலன், விடுதலைப்புலிகளின் நீதி மற்றும் நிர்வாக பொறுப்பாளர் பரா, விளையாட்டுத்துறை பொறுப்பாளர் கி.பாப்பா, அரசியற்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி, கவிஞர் புதுவை இரத்தினதுரை, திருகோ ணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன், சஞ்சயன், சோ.தங்கன், வீமன், லோர ன்ஸ், ரேகா, வேலவன், நீலன் மொத்தமாக 16 சிரேஸ்ட போராளிகள் உள்ளடக்கப்படுகின்றனர்.

அது மட்டுமல்லாது சரணடைந்த விடுதலைப்புலிகளின் இராணுவத்தளபதி கேணல்.ரமேஷ் இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலைசெய்யப்படும் காட்சிகள் பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டியங்கும் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியானது. அதேபோன்று வெள்ளைக்கொடியுடன் சரணைந்த பா.நடேசன், புலித்தேவன் இருவரின் உடல்கள் வெட்டப்பட்டு சித் திரவதைக்குட்படுத்தப்பட்டதாகவும் சனல் 4 ஆவணப்படத்தில் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டன

SriLanka-6

போராட்ட வரலாற்றில் இவர்கள் அனைவரும் 25வருடங்களுக்கு மேலாக விடுதலைப்புலிகள் அமைப்புடன் இருந்து செயற்பட்டனர். சரணடைந்த போராளிகளை கொல்வது என்பது மனிதாபிமானமற்றமுறைதான். மறு பக்கத்தில் பார்க்கின்றபொழுது, சயனைட் வில்லைகளை கழுத்தில் தொங்கவிட்டிருந்த இத்தளபதிகள் தலைவரின் கொள்கையின் பிரகாரம் எதிரியிடம் பிடிபடாது, தாக்கியழித்து இயலாத கட்டத்தில் சயனைட் அருந்தி வீரச்சாவடைவதே இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று கூறி தம் உயிரை தியாகம் செய்வதேயாகும். கி.பாப்பா, இளம்பரிதி ஆகிய இரு போரா ளிகள் இராணுவத்தினருடன் இணைந்து காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதா கவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன. ஆனால் இவர்களை இராணுவம் விட்டுவைக்கப்போவதில்லை. கருணா, பிள்ளையான் போன்ற ஒரு சில போரா ளிகள் உயிர் பிழைத்துள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள இனத்திற்காகவே போராடியவர்கள் என்றே கருதுகின்றனர். வரலாறுகளும் அதனையே சொல்கின்றது. சஞ்சயன், வீமன், லோரன்ஸ், ரேகா, நீலன் போன்ற போராளிகள் வலிந்த சிறப்புத் தாக்குதல்களை நடத்துவதில் திறமையானவர்கள். இறுதிக்கட்ட நேரத்தின் பொழுது இவர்களின் போராட்டம் இராணுவத்தினருக்கு எதிராக பாரிய இழப்புக்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தது.

கேணல் ரமேசைப் பொறுத்தவரையில் ஆயிரக்கணக்கான இராணுவத் தினரை வன்னிப்பெருநிலப்பரப்பில் கொன்று குவித்தார். அவர் விஷவாயுவின் மூலமே கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் அவர் அகப்பட்டுக்கொண்டதாகவும் செய்தி கள் வெளிவந்தன.

ஈழப்போரின் இறுதியில் ஆயிரக்கணக்கான இராணுவத்தின ரைக் கொன்று குவித்தவர் ரமேஷ் என்பதை அக்காலகட்டத்தில் ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது.

அவ்வாறான தாக்குதல்களை நடத்திய ரமேஷ் இராணுவத்தினரிடம் அகப்பட்டால் என்ன நடக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். கடந்த பல வருடங்களாக தமிழ் மக்கள் நீதி கேட்டு கிடைத்த வரலாறு இல்லை. சரணடைநத ஏனைய போரா ளிகள் பொதுமக்கள் போன்றோரும் கண்மூடித்தனமான முறையில் இலங்கையின் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளானார்கள்.

அத்துடன் விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலச்சந்திரன், செய்திவாசிப்பாளர் இசைப்பிரியா போன்றோரும் உள்ளடக் கப்படுகின்றனர். இவர்களைப் போன்று இன்னும் எத்தனை ஆயிரம் பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

isai_perija_1852009_2

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்து 05 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் இதுவரையி லும் அதற்கான தீர்வுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஐக்கிய நாடுகள் சபை என்றும் ஜெனிவாத் தீர்மானம் என்றும், அமெரிக்கா தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க வலியுறுத்துகின்றதென்றும், தமிழ் நாடு கொந்தழித்து எழும் என்றும் கூறப்பட்டதே தவிர நடந்தது ஒன்றுமில்லை.

இந்திய அரசினைப் பொறுத்த வரையில் விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இறுதிவரை செயற்பட்டனர். தற்பொழுது காங்கிரஸ் அரசு ஆட்சி கவிழ்க்கப்பட்டு பா.ஜ.க அரசு ஆட்சியிலுள்ளது. அவர்கள் தமிழ் மக்களின் மீது அக்கறை காட்ட வேண்டியதன் அவசியம் பெரிதள வில் இல்லை. இருந்தபோதிலும் அயல் நாடு என்கின்ற காரணத்தினாலும், ஆசியப்பிராந்தியத்தில் திருகோ ணமலை துறைமுகம் சிறந்து விளங்குவதனாலும் அதனை இந்தியரசு தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் செயற்பட்டு வருகின்றதே ஒழிய வேறொன்றுமில்லை.

warnwomenananthi

மேற்குறிப்பிடப்பட்ட தளபதிகள் அனைவரும் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தார்களா என்பது கேள்விக்குறியாகவிருக்கும் நிலை யில், அவ்வாறு அவர்கள் சரணடைந்தி ருந்தாலும் கூட இவர்களுக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை. தமிழ்மக்களாகிய நாம் எமது இன விடுதலைக்காக அஹிம்சை வழி யில் போராட்டங்களை ஆரம்பிப்பதே சிறந்ததொன்றாக அமையும்.

 

– சுழியோடி –

SHARE