தனது பயனர்களுக்கு புதிய அனுபவத்தினை தர தயாராகும் சம்சுங்

292
ஏனைய நிறுவனங்களைப் போன்றே ஸ்மார்ட்கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களும் விற்பனைக்கு பிந்திய சேவையினை பயனர்களுக்காக போட்டி போட்டு வழங்கிக்கொண்டிருக்கின்றன.இவ்வாறு தனது வடிவமைப்பிலான கைப்பேசிகளுக்கு பயனர் சேவையை வழங்குதவற்கு சம்சுங் நிறுவனம் Samsung+ எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது.

தற்போது இந்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளிவரவுள்ள நிலையில் தொலைவிலருந்தான வாடிக்கையாளர் சேவை (Remote Customer Support) வசதியினை உள்ளடக்கியதாக வடிவமைத்துள்ளது.

இதன் மூலம் கைப்பேசிகளில் ஏற்படும் கோளாறுகளை சம்சுங் நிறுவனம் குறித்த அப்பிளிக்கேஷன் ஊடாக நேரடியாகவே உங்கள் கைப்பேசியினை கையாண்டு தீர்வைப் பெற்று தரக்கூடியதாக இருக்கும்.

மேலும் இவ் வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Galaxy S7 மற்றும் S7 Edge ஆகிய கைப்பேசிகளில் விரைவில் கிடைக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE