சைபீரியன் யூனிகோன் விலங்கு பூமியில் அண்மையில் வாழ்ந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

277
சைபீரியன் யூனிகோன் எனப்படுவது காண்டா மிருகத்தினையும், குதிரையினையும் ஒத்த ஒரு விலங்கு ஆகும்.இவ் விலங்கானது சுமார் 350,000 வருடங்களுக்கு முன்னர் பூமியில் இருந்து இல்லாமல் போனதாக நம்பப்பட்டதுடன், நீண்ட காலத்திற்கு முன்னர் அழிந்துவிட்ட உயிரினங்களுள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் அண்மையில் படிம நிலையில் உள்ள குறித்த விலங்கின் மண்டையோட்டுப் பகுதி கஜகஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப் படிமத்தை ஆய்வு செய்த ஆராய்ச்சிளார்கள் அவ் விலங்கானது 29,000 வருடங்களுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ் வகை விலங்குகள் 2 மீற்றர் உயரம் உடையதாகவும், 4.5 மீற்றர் நீளம் உடையதாகவும் இருந்துள்ளதுடன், சுமார் 4 தொன் நிறையினைக் கொண்டவையாகவும் இருந்திருக்கலாம் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE