சின்ன வயசு ஹீரோ கதையை என் வயசுக்கு ஏற்ப மாற்றி நடிக்கிறேன் என்றார் கார்த்தி. கார்த்தி நடிக்கும் புதிய படம் மெட்ராஸ். அட்டகத்தி ரஞ்சித் டைரக்ஷன். ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கேத்ரினா ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் ஆடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டார். இப்படத்தில் நடிப்பதுபற்றி கார்த்தி கூறும்போது, ஒரு நல்ல ஸ்கிரிப்ட் பல மாதமாக கோடம்பாக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டதும் இயக்குனர் ரஞ்சித்தை வரவழைத்தேன். ஏற்கனவே இந்த ஸ்கிரிப்ட்டை கேட்டிருந்தேன். நன்றாக இருந்தது.
இதில் நான் நடிக்கலாமா என்று அவரிடம் கேட்டபோது, நீங்கள் நடித்தால் இன்னும் சந்தோஷம் என்றார். கதைப்படி சின்ன வயது ஹீரோவை என் வயதுக்கு மாற்றி இருக்கிறோம். மற்றபடி ஸ்கிரிப்ட்டில் ஒரு மாற்றமும் இல்லை. வட சென்னையில் நடக்கும் கதையை யதார்த்தமாக சொல்கிறது.
அட்டகத்தி படத்தில் எல்லா காட்சி களையும் காமெடியா சொன்ன ரஞ்சித் இப்படத்தில் எல்லாவற்றிலும் ஒரு சீரியஸ்னஸ்சுடன் சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு இது ரொம்பவும் முக்கியமான படமாக இருக்கும் என்றார்