வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப்

270

whatsup-web

மெசேஜ் ஆப்ஸில் முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள புதிய வசதியை அளித்துள்ளது.உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதுமைகளை அவ்வப்போது புகுத்தி வந்தது.

வாட்ஸ் அப் குரூப் சாட்டில் 100 நபர்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற எண்ணிக்கையை 256ஆக உயர்த்தியது.

இதுபோல் பல மாற்றங்களை செய்து வந்தது. இந்நிலையில் தற்போது மறையாக்கம்(Encryption) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நாம் ஒருவருக்கு அனுப்பும் தகவல், புகைப்படம், வீடியோ என எதுவானாலும் மறையாக்கம் செய்யப்பட்டே பகிரப்படும்.

இதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு அனுப்பப்படும் தகவல்களை யாரும் இடை மறித்து ஹேக் செய்ய முடியாது.

எனினும் இந்த வசதியை பெற வாட்ஸ் அப்பை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE