என்னை ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திவிட்டார் கோஹ்லி: அடிலெய்ட் மோதல் குறித்து ஜான்சன் (வீடியோ இணைப்பு)

402
அடிலெய்ட் டெஸ்டில் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் மனம் திறந்து பேசியுள்ளார்.டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது மிட்செல் ஜான்சன், கோஹ்லியின் 2015ம் ஆண்டு உலகக்கிண்ண செயல்பாட்டை கிண்டலடித்து டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் அதிரடி காட்டிய கோஹ்லி 51 பந்தில் 82 ஓட்டங்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறவைத்தார்.

ஆனால் தான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று குறிப்பிட்ட மிட்செல் ஜான்சன், கோஹ்லிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், 2014ம் ஆண்டு அடிலெய்ட் டெஸ்டில் நடந்த மோதல் குறித்து மிட்செல் ஜான்சன் கூறுகையில், ”அந்த டெஸ்ட் போட்டியில் நான் கோஹ்லியை ஆட்டமிழக்க செய்ய முயற்சித்த போது நான் எறிந்த பந்து அவர் மீது பட்டது.

ஆனால் அப்போது கோஹ்லி என்னை போல் நடந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக அன்று இரவு நடந்த செய்தியாளர் சந்திப்பில் ’என்னை ஒரு வீரராகவே மதிக்கவில்லை’ என்று கூறினார். இது எனக்கு கோபத்தை உண்டாக்கியது.

அவர் அவுஸ்திரேலிய வீரர்கள் போல் களத்தில் போராடும் குணத்தை கொண்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் அவரை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

9வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி வருகிற 9ம் திகதி தொடங்கி மே 29ம் திகதி வரை நடக்கிறது.

SHARE