டுபாய் கடற்கரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்லமாக அழைக்கப்படும் கடலுக்கு கீழாக அமைந்த படுக்கையறைகளைக் கொண்ட மிதக்கும் விடுமுறை உல்லாச விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.
கடல் வாழ் உயிரினங்களை நேருக்கு நேர் கண்டு களித்தவாறு பொழுதைக் கழிக்கவும் உறங்கவும் உதவும் இந்த விடுமுறை வாசஸ்தலங்கள் டுபாய் கடற்கரையிலிருந்து 2.5 மைல் தொலைவில் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
இந்த விடுமுறை வாசஸ்தலங்கள் ஒவ்வொன்றையும் ஸ்தாபிக்க தலா ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி விடுமுறை விடுதிகள் ஸ்தம்பிக்கும் பணி 2018 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதன் பிரகாரம் முதலாவதாக 4,000 சதுர அடி அளவான விடுமுறை வாசஸ்தலம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.