இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஓர் ஆண்டுக்கு ஒன்றரை கோடி Premature Babies பிறக்கின்றன.
இவர்களுக்கு தாயின் அரவணைப்பு கிடைக்காமல் போகிறது, இப்படியான குழந்தைகளுக்காக சாம்சுங் நிறுவனம் ‘Voice Of Life’ என்னும் ஆப்பை தயாரித்துள்ளது.
இந்த ஆப் அம்மாவின் குரலையும், இதயத்துடிப்பையும் பதிவு செய்து கொள்கிறது.
இந்த ஓடியோவை இன்குபேட்டருக்கும், அதில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்றவாறு மாற்றுகிறது.
“குழந்தைக்கு அருகில் குட்டி குட்டி ஸ்பீக்கர் வைத்து அந்த ஓடியோவை ஒலிபரப்பினால், குழந்தையிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது” என்கிறார்கள் மருத்துவர்கள்.
இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், நிச்சயம் மருத்துவ துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.