மஹிந்தவை அரசியலில் இருந்து ஓரங்கட்டி, அவரைக் கொலை செய்ய மைத்திரி அரசு முனைகிறது

371

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான செயற்பாடுகள் அண்மைக்காலமாக தீவிரமாக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப்பாதுகாப்புக்கள் விலக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தினைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் போராட்டத்தை மழுங்கடித்தவர் என்கிற பெயர் அவருக்கு இருக்கிறது. அவருடைய ஆதரவாளர்கள் இப்புதிய கூட்டரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு, அரசுடன் இணைந்திருந்து செயற்பட்டுவந்தாலும் மஹிந்தவினது பரம்பரையையே அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கு இவ்வரசு முயற்சிக்கிறது. இரு பிரதான சிங்கள கட்சிகளுக்குள் பிரச்சினைகளை பூதாகரமாகக்காட்டி தமிழ் மக்களுக்கு வழங்கவிருக்கின்ற தீர்வுத்திட்டங்களை தாமதப்படுத்தி தமிழ்-முஸ்லீம் இனங்களுக்கிடையிலான உறவுகளை விரிசல் அடையச்செய்யும் நோக்கிலும் இவ்வரசு செயற்படுகிறது. முஸ்லீம்கள் ஒரு பகுதியில் தனி அலகினைக் கோருகிறார்கள். தமிழ்பேசும் மக்களை சார்ந்தவர்களே இந்த முஸ்லீம்கள் என த.தே.கூட்டமைப்பு கூறுகிறது. இவ்வாறிருக்க எவ்வாறு மற்றொரு சிறுபான்மை இனம் என முஸ்லீம்களை வகைப்படுத்துவது. இனங்களுக்கிடையில் பிரிவினைவாதங்களைத் தோற்றுவிப்பது மஹிந்தவும் அவரது சகாக்களுமே என பிரதமரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவேதான் படிப்படியான கைதுகள் தொடர்கின்றன.

357861-mahinda-rajapaksa

பாதாள உலகக்குழுவினரின் மூலம் மஹிந்தவை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு மஹிந்தவின் தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது. UNP அரசின் காலத்தில் பாதாள உலகக்குழுவினரது நடவடிக்கைகள் நாட்டில் தீவிரமாகக் காணப்பட்டது. பின்னர் மஹிந்தவின் காலத்தில் இவர்கள் பெருவாரியாக சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாகச் செயற்பட்ட பாதாள உலகக்குழுவினைச் சேர்ந்த பொட்டு நௌபர் என்ற நபர் தற்போது சிறையில் உள்ளார். இவரது சகாக்கள் இன்னமும் செயற்படுகின்றனர். மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாகவிருந்தால் சிங்கள சமுதாயத்தில் பாரிய அச்சுறுத்தல்களையும், இரத்த வெறியாட்டங்களையும் காணவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

Mattala-MRIA

இனப்படுகொலையில் இருந்து மஹிந்தவைக் காப்பாற்றும் நோக்கில் இவ்வரசு செயற்பட்டாலும் மறுபக்கத்தில் மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்கிற பயத்தில் அவரையும், அவர் சார்ந்தவர்களையும் சிறையிலடைத்தல் அல்லது கொலை செய்வது போன்ற நடவடிக்கைகளில் இவ்வரசு செயற்பட ஆரம்பிக்கலாம். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த திட்டமாக சீன அரசின் மத்தியில் மஹிந்த மீதான நம்பிக்கையை இழக்கச்செய்தல் என்ற அடிப்படையில் செயற்படுகின்றார். இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்த சீன அபிவிருத்திகள் அனைத்தும் மீளவும் ஆரம்பிக்கப்படும் நிலையில் உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அபிவிருத்திகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது. ஹம்பாந்தோடடை துறைமுகம், மத்தல விமான நிலையம், கொழும்புத் துறைமுக நகர நிர்மாணப் பணியகம் சீனாவிடம் மீளவும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹிந்தவின் வெளிநாட்டுத் தொடர்புகள், கருப்புப் பணம் போன்றவை தற்போது அரசினால் கண்கானிக்கப்பட்டு வருகின்றது. பல சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. எவ்வாறான குற்றச்சாட்டுக்களை இவரது குடும்பம் சார்ந்தவர்கள் மீது சுமத்தி அவர்களை எவ்வாறு சிறையில் அடைக்கலாம் என இவ்வரசு திட்டமிட்டு செயற்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகாக்களுக்கு உயிர் ஆபத்துக்கள் ஏற்படுத்தப்படுமாகவிருந்தால் மீண்டும் ஒரு இனக்கலவரம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும் எனலாம். இவ்வரசு எனது பாதுகாப்பை நீக்கி, எனக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறது என ஏற்கனவே மஹிந்த அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தார். இவ்வாறான நிலையில் அடுத்து நிகழப்போவதை பொறுமையாகவிருந்து அவதானிப்பதே சிறந்தது எனலாம்.

-நெற்றிப்பொறியன்-

Sri-Lanka-Gives-an-Inch-on-Port-City-Project

 

SHARE