ஜனாதிபதியை பதவி கவிழ்க்க நோர்வே முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசாட்சிப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதியை பதவி விலக்குவதே நோர்வேயின் நோக்கமாக அமைந்துள்ளது. எனினும், இந்த நோக்கத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள்.
நாட்டில் பல்வேறு மத மற்றும் இனத் தரப்புக்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் முயற்சியில் நோர்வே ஈடுபட்டுள்ளது.
2005ம் ஆண்டு முதல் மக்கள் ஜனாதிபதியுடன் இருக்கின்றார்கள். நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 161 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கின்றனர்.
ஜனாதிபதி கிராமங்களை அபிவிருத்தி செய்யும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
நாட்டின் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையை ஜனாதிபதியே ஏற்படுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.