பிரான்ஸ் – டௌலஸ் எனும் இடத்தில் நேற்று தொடர் மாடி குடியிருப்பில் 7ஆம் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தானது, எரிவாயு கசிவினால் நிகழ்ந்துள்ளது.
இதேவேளை, வீட்டு உரிமையாளர்கள் வேலைக்கு சென்றிருந்தமையால் ஆபத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
அத்துடன், பொருள் சேதம் ஏற்பட்டதுடன் வளர்ப்பு பிராணியான நாய் உயிர் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.