அணிகலன்களுக்கு ஆசைப்படாத பெண்களே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த சங்கதிதான். அதிலும், விலையுயர்ந்த ஆபரணங்களான வைரம், பவளம், மரகதம், கோமேதகம், முத்து போன்ற இயற்கை வளத்தை தங்கத்தில் பதித்து அணிந்துகொள்வதில் பெண்களுக்கு உள்ள ஆசை சற்றதிகமான, அலாதியான பேராசை என்றுகூட சொல்லலாம்.
இத்தகைய நவரத்தினங்களில் ஒன்றான முத்து, கடல்வாழ் உயிரினங்களான சிப்பி மற்றும் மட்டிவகை மீன்களுக்கு உள்ளே புதையலாக போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதால் முத்துக்களின் மீது பலருக்கும் கொள்ளைப் பிரியம். முத்துக்கள் பல வண்ணங்களில், பல வடிவங்களில் கிடைக்கின்றன.
அவற்றில், உருண்டை வடிவத்தில் உள்ள வெண்ணிற முத்துக்கள் விலைமதிப்புள்ளதாக விளங்குகின்றது. நகைகளில் பதிப்பதோடு மட்டுமில்லாமல், மாலையாக கழுத்தில் அணிந்துகொள்ளவும் இவை ஏற்றதாக உள்ளன. மட்டி மீனை வெட்டி அதன் வயிற்றில் இருக்கும் முத்துப் புதையலை அந்தப் பெண் எடுக்கும் வீடியோவைக் காண..,
போலியில்லாத அசல் முத்துக்களின் விலை ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விறக்கப்படும் நிலையில், ஒரு மட்டி மீனின் வயிற்றில் கொட்டிக்கிடக்கும் முத்துக்களை புதையலாக பெற்ற இந்த டச்சு நாட்டுப் பெண்ணின் அதிர்ஷ்டம் பலருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.