புலிகளின் துப்பாக்கிகளுக்கு பயந்து அடங்கியிருந்த யாழ்ப்பாணத்து ரவுடிகளின் காடைத்தனம் புலிகளின் மறைவின் பின்னர் இன்று என்றும் இல்லாதவாறு தலைதூக்கி இருக்கின்றது.
எங்கு பார்த்தாலும் கொள்ளை, வாள் வெட்டு, பாலியல் நடவடிக்கைகள். போதைப்பொருள் வியாபாரம் மக்கள் இன்றைய நிலையில் பயத்துடனே இரவுப்பொழுதை கழிக்கின்றனர்.
எங்கு எப்போது யார் வீட்டில் கொள்ளை நடக்கும், யாரின் வீடு புகுந்து வாள்வெட்டு நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. தென் இந்திய கழிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அதை நிஜத்தில் செயற்படுத்துகின்றனர் இந்த யாழ் தமிழ் காடையர்கள்.
இந்த பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி திரு. இளஞ்செழியனின் கட்டளையின் பிரகாரம் வடபிரந்திய பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் குழு அமைக்கப்பட்டு அவர்களின் செயற்பாட்டையே நீங்கள் வீடியோவில் பார்த்தீர்கள்.
முழுக்காரணம் இங்கு ( அவுஸ்ரோலியாவில்) இருக்கின்ற இதனுடன் சம்மந்தப்பட்டுள்ள சகோதரர்கள் , சகோதரிகள் , மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு அனுப்புகின்ற பணம் அங்கு ( யாழ்ப்பாணம் ) உள்ளவர்களை பிழையான பாதைக்கு கொண்டு செல்கின்றது தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
முன்பு இருந்தவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா..? இங்கு இருந்து ஊதாரிகளான உங்கள் உறவுகளுக்கு பணம் அனுப்பும் ( நல்லவர்கள் அதுவும் தங்களது குடும்பத்துக்கும், நன்கொடையாக பணம் அனுப்புகின்றவர்களையும் தவிர்த்து ) எனதருமை தமிழ் சொந்தங்களே புரிந்து கொள்ளுங்கள்…!
ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் எம் தமிழினம் அல்லல்படுகிறது, இனியாவது உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். கவலையடைகிறேன் இச்செய்திதனை அறிந்து….?!?!?!