உடற்பயிற்சி கண்காணிப்பு சாதனத்தை அறிமுகம் செய்யும் Huawei

273

ijyujytghuj

வேகமாக வளர்ந்து வரும் இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான Huawei ஆனது V8 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

அத்துடன் புதிய உடற்பயிற்சி கண்காணிப்பு சாதனம் ஒன்றினையும் அறிமுகம் செய்ய எண்ணியுள்ளது.

Honor Band A1 எனும் குறித்த சாதனமானது ஓடும் தூரம், நடக்கும் தூரம், காலடிகள் என்பவற்றினை அளக்கும் ஆற்றலை கொண்டுள்ளன.

இவற்றிற்கும் மேலாக உடற்பயிற்சியின் போது உடலிலிருந்து எரிக்கப்படும் கலோரியின் அளவினை எடைபோடக் கூடியதாகவும் இருக்கின்றது.

தவிர இதன் உதவியுடன் நித்திரை செய்யும் கோலத்தினை கண்காணித்து தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

இதனை Android மற்றும் iOS சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதில் 28 நாட்கள் வரை மின் சக்தியை வழங்கக்கூடிய 70 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

8 வகையான நிறங்களில் கிடைக்கப்பெறும் இச் சாதனத்தின் விலையானது 15 டொலர்கள் ஆகும்.

SHARE