வெளியாகியது அசத்தலான Pebble ஸ்மார்ட் வாட்ச்

295

pebble

Pebble நிறுவனம் ஆன்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்-ல் (IOS) இயங்கக்கூடிய தனது புதிய ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியில் காலடி பதித்து வரும் இந்நிறுவனம் இந்தியாவில் Pebble Classic, Pebble Time, Pebble Time Steel மற்றும் Pebble Time Round என்ற 4 வகை ஸ்மாட்ச் வாட்ச்சை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மாட் வாட்ச் ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை நிலைத்து நின்று வேலை செய்யும். பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மாட் வாட்ச்சில் பல வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான எரிக் தெரிவித்துள்ளார்.

Classic வகை ரூ. 5999, Time ரூ.9999, Time Round ரூ.13,599 மற்றும் Time Steel ரூ.15,999க்கும் இந்திய சந்தைகளில் விற்கப்படுகிறது.

SHARE