கனடா மக்களினால் முன்னாள் போராளி குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

359

625.117.560.350.160.300.053.800.210.160.90

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசங்களில் வசிக்கும் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை கனடா வாழ் மக்களின் நிதி உதவியை கொண்டு அதற்கான உதவிகள் இன்று கரடியனாறு பிரதேசத்தில் வைத்து வழங்கப்பட்டது.

யுத்தத்தினால் பாதிப்படைந்து புனர்வாழ்வு பெற்று தங்களின் அன்றாட வாழ்வாதார நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் பெரும் கஸ்டத்தின் மத்தியில் இன்றைய காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல முன்னாள் போராளிகள் தங்களின் வாழ்க்கையை நடாத்திக்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய தினம் சுமார் 17 பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான சில்லறைக் கடைக்கான பொருட்கள், குளிர்பானக் கடைக்கான குளிர்சாதனப் பெட்டி, மாடு, ஆடு, தோட்டப் பயிர் செய்கைக்குரிய நீர் இறைக்கும் இயந்திரம் போன்ற பெறுமதியான வாழ்வாதார உதவித் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனடிப்படையில் இன்றைய தினம் இவ்வாறான உதவிகளை தங்களுக்கு வழங்கி வைத்த கனடா வாழ் செந்தில் குமரன் உட்பட கனடா வாழ் மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவற்றுக்கு எல்லாம் முன்னின்று உழைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், பயனாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

அத்துடன் இவ்வாறான உதவிகள் மென்மேலும் இந்த மாவட்டத்தில் வாசிக்கும் எம்மைப் போன்ற கால், கை, உடலில் பல அபவயங்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும் எதிர்காலத்தில் கிடைக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கனடா வாழ் செந்தில் குமரன் உட்பட பயனாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

SHARE