தாவரங்களை பாதுகாக்க சுழலும் சைபர் தோட்டம்

422

gfgfgvfcgv

தாவரங்களை பராமரிப்பதொன்றும் அவ்வளவு சுலபமான காரியமல்ல.

எங்கள் பூந்தோட்டத்தில், வீட்டில் வைப்பதற்காக பல வகை தாவரங்களை தேர்வு செய்கிறோம்.

ஆனால் அவைகளை சரியான முறையில் பராமரிக்க முடிவதில்லை.

தாவரங்களுக்கு சரியான அளவில் நீர் கிடைக்கப்பெறுகிறதா, எல்லாப் பகுதிகளுக்கும் சூரிய ஒளி கிடைக்கிறதா என கவனிக்க முடிவதில்லை.

தற்போது கட்டட கலைஞர்களால் தாவரங்களுக்கு வலுவூட்டும் வழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுதான் இந்த தன்னாட்சி சைபர் தோட்டம்.

இத் தொழில்நுட்பமானது லண்டனைச் சேர்ந்த William Victor Camilleri, Danilo Sampaio அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு தாவர உடல் தொழிற்பாடு பல வகை உணரிகளால் மேற்பார்வை செய்யப்படுகிறது.

இதன் மையத்தில் 12 தொகுதி தோட்டம் இருப்பதாகவும், ஒவ்வொன்றினதும் வெளிப்புறம் பிரித்தானியாவுக்கே உரிய இனங்களை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ் அமைப்பானது அதன் திணிவுமையத்தை நகர்த்தி அசையக்கூடியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இத் தோட்டம் தனக்கு சாதகமான சூழல் கிடைக்கும் வரை அசைந்து திரியக்கூடியது. அதற்காக உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அச் சூழல் மாறாதவிடத்து அங்கேயே தங்கியிருந்து பின் வேறு சாதகமான இடங்களை நோக்கி செல்லக்கூடியது.

SHARE