ஏ.எம்.ரத்னம் அஜீத்துக்கு நெருக்கமானவரா.

492

சினிமா உலகில் அஜீத்துக்கு இருக்கும் கெத்து போல் வேரு எந்த நடிகருக்கும் இல்லை. அஜீத்துடன் படம் செய்தால் போதும் நாம் வளர்ந்து விடுவோம் என்ற கணக்கோடு அஜீத்தை நாடுபவர்கள் பலர்.

அதிலும் தயாரிப்பாளர்கள் அஜித்தின் கால்ஷீட் கிடைத்தால்போதும், மினிமம் ஐந்து கோடி லாபம் கிடைத்துவிடும் என்கின்றனர்.

அஜீத்தின் கால்ஷீட்டுக்காக தவம் கிடப்பவர்கள் நிறைய பேர். ஆனால் அது என்னவோ வரிசையாக ஏ.எம்.ரத்னம் அவர்களுக்கு மட்டும் லக் அடித்துக் கொண்டே இருக்கிறது.

வணிக தரத்தில் முன்னணியில் இருக்கும் அஜித் ஏ.எம். ரத்னத்துக்கு ஆரம்பம் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார். அந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே அவருக்கே அடுத்தப் படத்துக்கான கால்ஷீட்டையும் கொடுத்தார்.

இதற்கிடையில் ஷங்கர் இயக்கத்தில், ஒரு படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார் என்றும், அதில் அஜித் நடிக்க இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது.

இதையெல்லாம் வைத்து காண்டான சில திரையுலகினர் அஜீத்துடன் ஏ.எம்.ரத்னம் பார்ட்னர் ஆகிவிட்டாரோ, தொடர்ந்து அவருக்கே அஜீத் கால்ஷீட் கொடுத்து வருகிறார் என முனுமுனுக்க ஆரம்பித்துவிட்டனர்.

 

SHARE