இந்தியாவில் மத்தியபிரதேசத்தின் குவாலியரில் பெண்ணை கத்தியால் தாக்கிய கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்ற பசுமாடு ஒன்று முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்போது சீமா குஜ்ஜர் என்ற இளம்பெண்ணை இரண்டு நபர்கள் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் குற்றுயிராக சரிந்த அந்த பெண்ணை தொடர்ந்து கத்தியால் தாக்கும் அந்த கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு பசுமாடு ஒன்று அந்த இருவர் மீது முட்டித்தள்ளியுள்ளது.
ஆக்ரோஷமாக பசுமாடு முட்டித்தள்ளியதில் நிலைகுலைந்து விழுந்த இருவரையும் அந்த பசுமாடு அங்கிருந்து துரத்தியுள்ளது. இதனையடுத்து பசுமாட்டின் ஆக்ரோஷத்திற்கு பயந்து அந்த நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
கத்தியால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதால் அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பியும் பாதி வழியில் குழைந்து விழுந்து இறந்துள்ளார்.
அந்த இளம்பெண் தாம் விரும்பிய இளைஞன் ஒருவருடன் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில்உடன்படாத அவரது உறவினர் இருவர் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கில் கத்தியால் பலமுறை தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார், கொலை செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொண்ட நபரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– See more at: http://www.manithan.com/news/20160518119943#sthash.ifPfyqjg.dpuf