மீண்டும் சந்தைக்கு வருகிறது நோக்கியா!

269

மொபைல் உலகில் கொடிகட்டி பறந்த நோக்கியா நிறுவனம் தனது ஆண்ராய்டு மற்றும் ஸ்மார்போன் வருகையால் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்தது.

இதனால்பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நோக்கியா தனது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தைமைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.

இந்நிலையில் மொபைல் தயாரிப்புக்குதனக்கென ஒரு தனி இடத்தையும், தொழில்நுட்பத்திற்கானபேட்டன்களை வைத்துள்ளது நோக்கியா.

இதனை மூலதனமாகக் கொண்டு பின்லாந்து நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள HMD குளோபல் ஓய் என்னும் நிறுவனத்திடம் மொபைல் தயாரிப்பிற்காகத் தனது தொழில்நுட்பத்தைப் பகிர ஒப்புக்கொண்டு 10 வருட கால ஒப்பந்தத்தில் இப்புதிய கூட்டணிஉருவாகியுள்ளது.

இம்முறை அண்ட்ராய்டு போன் மற்றும் டேப்லெட்களை நோக்கியா தொழில்நுட்பத்தில் தயாரித்து HMD குளோபல் ஓய் சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

உலகச் சந்தைகளில் நோக்கியா போன்களை விற்பனை செய்வதற்காகவும், அதன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காகவும் HMD குளோபல் ஓய் நிறுவனம் நோக்கியா நிறுவனத்திற்கு ராயல்டி தொகை அளிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது.

மொபைல் விற்பனை மற்றும் தொழில்நுட்பத்தில் கொடிகட்ட பறந்த நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் மற்றும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் திடீர் வளர்ச்சி ஆகியவை இந்நிறுவனத்தை மிகப்பெரிய வர்த்தகச் சரிவை சந்தித்து.

இதன்பின் 2014ஆம் ஆண்டில் தனது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. மேலும் மைக்ரோசாப்ட் மற்றும் நோக்கிய நிறுவனங்கள் மத்தியிலான டீல் முழுமையாக முடியாத நிலையில், HMD நிறுவனம் நோக்கியாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சிறிது காலம்தேவைப்படும்.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் தனது பியூச்சர் போன் சொத்துக்களை FIH மொபைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பாக்ஸ்கான் மற்றும் HMD கூட்டணியின் கிளை நிறுவனம் தான் FIH மொபைல். மேலும் HMD நிறுவனம், நோக்கிய நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து பியூச்சர் போன் தயாரிப்பதற்கான ஒப்புதலையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

default_og_image

SHARE