பாரிஸில் இருந்து கெய்ரோவுக்கு சென்ற விமானம் மாயம்: 69 பேரின் நிலை என்ன?

382

பாரிஸில் இருந்து கெய்ரோவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Airbus A320 என்ற இந்த விமானம் பாரிஸில் இருந்து உள்ளூர் நேரப்படி 11.09 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளது.

இதில், 59 பயணிகளும், 10 விமான ஊழியர்களும் அடங்குவர், எகிப்தின் தலைநகரான கெய்ரோவை சென்றடைவதற்கு முன்னர், 10 மைல்கள் தொலைவிலேயே விமானத்தினுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தை தேடும் பணியில், எகிப்து நாடு ஈடுபட்டுள்ளது.

SHARE