உடனடியாகவே மொழிபெயர்க்கும் புதிய Earbuds

272

இதுவரையில் நாம் அடுத்தவரின் பாஷை தெரியாதவிடத்து, அவருடன் கை சைகைகள் மூலமும், தெரிந்தளவு ஆங்கிலத்தை உயர்த்தியும், தாழ்த்தியும் பேசியிருக்கிறோம்.

ஆனால் இந்த காதில் அணியக்கூடிய புதிய தொழில்நுட்பம் விரைவில் அடுத்தவர்களுடன் பயமின்றி உடையாட உதவும்.

இந்த உலகின் முதலாவது Smart Ear piece ஆனது இதைப் பயன்படுத்தும் வேறுபட்ட மொழிகளில் உரையாடும் இரு பயனாளர்களுக்கிடையே மொழி பெயர்க்க கூடியது.

இது மற்றைய Earbuds ஐப் போலவே வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், கம்பிகள் அல்லது கேபிள்களை கொண்டிருப்பதில்லை.

அத்துடன் இவை இணைய வசதியின்றியும் செயற்படக்கூடியது. முதல்கட்டமாக இது அடுத்த வாரமளவில் வெளியிடப்படவுள்ளது.

இதில் ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், மற்றும் இத்தாலிய மொழிகளே தற்போது வரையில் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்த மொழிகளையும் எதிர் பார்க்கலாம் என குறித்த தயாரிப்பு தரப்பு கூறுகின்றது.

இதன் சில்லறை விலை கிட்டத்தட்ட US$249- $299 ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் மேலும் கூறுகையில், முதல் கட்டமாக இது, குறித்த earbuds அணிந்துள்ள இருவர்களுக்கிடையிலேயே தொழிற்படக் கூடியது.

எனினும் வருங்காலத்தில் நம் முன்னாலுள்ள ஒரு பேசும் சாதனத்திலிருந்தும் வரும் வார்த்தைகளை கூட மொழிபெயர்கக் கூடியனவாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்கின்றனர்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

SHARE