Flash memory-யிலும் 50 மடங்கு வேகம் கூடிய Memory: IBM விஞ்ஞானிகள் சாதனை

267

முதன் முறையாக IBM விஞ்ஞானிகளால் Optical Memory உடன் கூடிய ஒரு புதுவகை வினைத்திறன் கூடிய தரவு சேமிப்பகத்துக்கான செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது PCM (Phase-Change Memory) வடிவில், ஒவ்வொரு கலத்திலும் கிட்டத்தட்ட 3 bits அளவில் தகவல்களை சேமிக்கக் கூடியது.

PCM ஒன்றும் புதிதானதொன்றல்ல, இது பல தசாப்தங்களாக பாவனையில் உள்ளளது தான். ஆனாலும் இதுவரையில் அதன் சேமிப்பு கலத்திற்கு 1 bits அல்லது 2 bits தகவல் என்ற அளவில் எல்லைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆகையால் IBM இன் இந்த புதிய கண்டுபிடிப்பானது முக்கியமானதொன்று. ஏனெனில் PCM இன் சேமிப்புத் திறன் கலத்திற்கு 3 bits தகவல் என்ற அளவில் அதிகரித்துள்ளமை. இதனால் அதன் வேகம் Flash Memory இலும் பல மடங்கு கூடியது.

அத்துடன் இப் புதிய Memory ஆனது விரைவில் எல்லா இடங்களிலும் கிடைக்கப்பெறக் கூடியதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதன் வேகம் DRAM இனை போலல்லாவிடினும், இதன் விலை ஒப்பீட்ளவில் குறைவானது. அதோடு சாதனங்கள் செயற்பாடற்ற நிலைகளிலும் இதில் சேமிக்கப்பட்டுள்ள Memory இழந்துவிடாது.

இதன் வேகம் DRAM இலும் 5 – 10 மடங்கு குறைவானது. ஆயினும் இதன் வேகம் flash memory இலும் 70 – 100 மடங்கு விரைவானது.

மற்றும், இப் PCM ஆனது 10 மில்லியன் தடவை மீள் பதிவுக்கு உட்படுத்தக்கூடியது. இதே நேரம் Flash Memory கிட்டத்தட்ட 3,000 பதிவேற்றல்களுக்கே பயன்படுத்தக் கூடியது.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

SHARE