கென்யாவில் சரக்கு விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து: 4 பேர் பலி

503
கென்யாவில் சரக்கு விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த நான்கு பணியாளர்கள் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. போக்கர் 50 என்ற அந்த சரக்கு விமானம், நான்கு பணியாளர்களுடன் ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் சிறு வணிக வளாகம் ஒன்றின் மீது மோதியது.

இதில் விமானத்தில் பயணம் செய்த நான்கு பணியாளர்களும் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு மையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் இருந்து இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாக கூறியுள்ள அம்மையம் எஞ்சியுள்ள இருவரின் சடலத்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளது.

SHARE