செல்பி பிரியர்கள் தாம் அழகானவர்கள் என்று மிகை மதிப்பீடு செய்வதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
அதாவது எழுந்தமானமாக அவதானித்ததில் பொதுவாக செல்பி எடுப்பவர்கள், படம் எடுக்க மறுக்கும் மற்றையவர்களிலும் பார்க்க ஈர்ப்பு குறைந்தவர்களாக, அதிகம் விரும்பத்தகாதவர்களாக, தற்காதலுள்ளவர்களாக இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இது தொடர்பான ஆய்வொன்று, Toronto பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்காக 198 கல்லூரி மாணவர்களை தேர்வு செய்திருந்தனர்.
அதில் 100 பேர் செல்பியை விரும்புபவர்களாகவும், 98 பேர் செல்பியை விரும்பாதவர்களாகவும் இருந்தனர்.
இங்கு ஒவ்வொருவரிடமும் சமூக வலைத்தளத்திற்கு பொருத்தமான செல்பியொன்றை எடுக்க பணிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் அவர்கள் ஒவ்வொருவரினதும் சாதாரண புகைப்படமும் எடுக்கப்பட்டிருந்தது.
அதாவது ஒவ்வொருவர் கையிலும் ஒரு செல்பி புகைப்படமும், ஒரு சாதாரண புகைப்படமும் இருந்தது.
பின்னர் இவர்கள் வெளிப் பார்வைாளர்களின் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இங்கு கவர்ச்சி, விரும்பத்தகு தன்மை, தற்காதல் அடிப்படையில் அவர்களது புகைப்படங்கள் மதிப்பிடப்பட்டிருந்தது.
இங்கு செல்பி புகைப்படங்களை விட, சாதாரண புகைப்படங்களுக்கே அதிக மதிப்பீடு வழங்கப்பட்டிருந்தது.
மேற்படி ஆய்வு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆகையால் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டே முடிவுகளை உறுதிப்படுத்த முடியும்.
ஆனால் ஆய்வாளர்களின் கருத்து என்னவென்றால், செல்லி பிரியர்கள் தாம் உண்மையில் இருப்பதை விட அழகாக கருதுவது மட்டுமல்லாது, மற்றவர்களிடத்தில் இவர்களுக்கான தெரிவும் குறைவு என்கிறார்கள்.