நேரடி ஒளிபரப்பின் போது பெண் பத்திரிகையாளரின் முகத்தில் பளார் விட்ட பிரான்ஸ் போராட்டக்காரர்!

389

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)

பிரான்ஸ் நாட்டில் அமலுக்கு வரவிருக்கும் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் நடத்திய போராட்டத்தினை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த பெண் பத்திரிகையாளரின் முகத்தில் போராட்டக்காரர் ஒருவர் அடித்துள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பணி நேரம் நீட்டிப்பு தொடர்பான புதிய மசோதாவினை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதம் முதல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தினை முனைப்பாக நடத்தி வந்த Nuit Deboit என்ற அமைப்பு, தற்போது மாணவர் இயக்கத்தினையும் தங்களோடு இணைத்திருப்பதால் போராட்டம் நாடு முழுவதும் வலுப்பெற்றுள்ளது.

பாரிஸில் இந்த அமைப்பினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது, ரஷ்ய ஊடகம் ஒன்று இதனை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தது.

அப்போது அந்த ஊடகத்தின் பெண் பத்திரிகையாளர் போராட்டம் குறித்து மக்களுக்கு தெரிவித்துக்கொண்டிருந்போது, முகமூடி அணிந்திருந்த போராட்டக்காரர்களில் ஒருவர், பெண் பத்திரிகையாளரின் முகத்தின் பக்கவாட்டில் அடிக்கிறார்.

இதனால், அவர் தலையில் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று விழுகிறது, அதன் பின்னர் மற்றொரு போராட்டக்காரர், இவர் பேசிகொண்டிருக்கையில் அதனை கெடுக்கும் விதமாக முன்னால் வந்து நின்றுகொண்டு கைதட்டுகிறார்.

ஆனால், அந்த பெண் பத்திரிகையாளரோ இதனை சற்றும் கண்டுகொள்ளாமல் தனது பணியினை தொடர்ந்துள்ளார்.

மேலும், இதுபோன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என பத்திரிகையாளர் Baranova கூறியுள்ளார், இந்த வீடியோ ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

SHARE