எந்தவொரு மேற்பரப்பிலும் ஒட்டக்கூடிய சிறிய ரக ரோபோ

294

தேனிக்களுக்குரிய பொதுவான பிரச்சனை அவைகளால் நீண்ட நேரம் பறக்க முடிவதில்லை. அதற்கான சக்தியை அவை கொண்டிருப்பதில்லை.

Harvard பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இப் பிரச்சினையை தீர்க்கக்கூடும். ஆம் அவர்கள் தேனீக்களை போன்ற அதே நிறையுடைய (100 Milligrams), ஆனால் சற்று பெரிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வகை ரோபோக்கள் தேனி ரோபோக்கள் என அழைக்கப்படுகின்றன.

இவ் இயந்திரங்கள் தற்காலிகமாக கீழிறங்குவதன் மூலம் தமக்குரிய சக்தியை சேமிக்கின்றன.

இவ்வகை ரோபோக்கள் மனிதனால் முடியாத, ஆபத்தான பல வேலைகளை செய்ய, பல அடைய முடியாத இலக்குகளை அடைய பயன்படுத்தப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதைவிட முக்கியமாக அனர்த்ங்களக்குள்ளான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் உதவும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பில் Moritz Graule கூறுகையில், இச் சிறிய ரோபோக்கள் விரைவில் சக்தியை இழந்துவிடும். ஆனால் நம்மை பொறுத்த வரையில் அதிக சக்தியின்றி அவை நீண்ட நேரம் தொழிற்படக் கூடியவையாக இருக்க வேண்டும். இதற்காக பூச்சியினங்கள் பின்பற்றும்,சக்தியை சேமிக்கும் பொறி முறையான தற்காலிக கீழிறங்கல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது என்கிறார்.

இவ்வகை ரோபோக்கள் மின்முனைக்கு ஏற்றம் வழங்கப்படும் போது அவை கண்ணாடி, மரம், இலைகள், சருகுகள் பேன்ற எவ்வகை மேற்பரப்பிலும் ஒட்டக்கூடியவை. பின்னர் ஏற்றம் வழங்கல் துண்டிக்கப்படும் போது அவை ஒட்டலிலிருந்து விடுபட்டு மீண்டும் பறக்கக் கூடியவை.

SHARE