லண்டன் Newcastle பல்கலைக்கழக ஆய்வாளர்களால் கட்டுப்படுத்தப்படாத மீன்பிடியின் தாக்கம் தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது கிட்டத்தட்ட 59 முள் மீன் இனங்கள் நீர் நிலைகளில் இல்லாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் மீனவர்களின் அறிவின்படி கடந்த 65 ஆண்டுகளில் மீன் இனங்கள் எவ்வாறு குறைந்துள்ளது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டிருந்தன.
இதன் போதே கிட்டத்தட்ட 59 மீன் இனங்கள் காணமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் 5 முள் மீன் இனங்கள் தற்போது வாழப் போரடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
கிட்டத்தட்ட 2,655 நேர்காணலின் போதே, 1950 தெடங்கி 2014 வரையில் இவ்வளவு இனங்களும் இல்லாமல் போனமை தெரிய வந்துள்ளது.
மஞ்சள் குருவியினங்கள் போன்ற இரை கௌவ்வியினங்களாலேயே இதன் குடித்தெகை பாதிக்கப்பட்டுளதொனவும், இவ் இரைகௌவ்விகளின் குடித்தொகையை குறைப்பதன் மூலம் இச் சூழல் தொகுதியை பாதுகாக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.