ஜனாதிபதிக்கான செலவுகள் அதிகரித்துள்ளது-நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.

632
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செலவுக்காக இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 34 கோடியே 64 லட்சத்து 64 ஆயிரத்து 210 ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதியின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட 856 கோடியே 91 லட்சத்து 70 ஆயிரம் ரூபா நிதிக்கு மேலதிகமாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஜனாதிபதியின் இந்த வருடத்திற்கான மொத்த செலவு 891 கோடியே 56 லட்சத்து 34 ஆயிரத்து 210 ரூபா வரை உயர்ந்துள்ளது.

நிதியமைச்சு வெளியிட்டுள்ள வருட மத்தியிலான அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கப்பட்ட நிதிக்கு அமைய ஜனாதிபதியின் ஒரு நாள் செலவு 2 கோடியே 34 லட்சத்து 77 ஆயிரத்து 178 ரூபா என்ற போதிலும் தற்போது அது 2 கோடியே 44 லட்சத்து 26 ஆயிரத்து 395 ரூபாவாக அதிகரித்துள்ளது.

 

SHARE