யாழ். முகமாலைப் பகுதியில் இருந்து இன்று காலை மேலும் ஒரு எலும்புக் கூடு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எலும்புக் கூடுகள், பொலித்தீன் பைகள், கைக்குண்டு, வெற்று ரவை நிரப்பி என்பன மீட்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த எச்சங்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றைய தினம் இந்தப் பகுதியில் சோதனைச் சாவடி இருந்த இடம் ஒன்றிலிருந்து பெண் விடுதலைப் புலி உறுப்பினருடைய எலும்புக்கூடு மீட்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்களே இந்த எலும்புக்கூடுகளை மீட்டு, பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனால், இப்பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என சந்தேகித்து கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களுடன் இணைந்து, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.