காதலியை 5 பேருடன் இணைந்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய காதலன்.

630
காதலியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் காதலன் உட்பட 6 பேரை கைது செய்தவதற்கான விசாரணைகளை முந்தல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

உடப்பு தமிழ் கிராமத்தின் 6ம் பிரிவில் வசித்து வந்த 17 வயதான யுவதியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த யுவதி உடப்பு பிரதேசத்தில் சிகை அலங்காரம் செய்யும் கடையொன்றில் தொழில் புரிந்து வந்த இளைஞருடன் காதல் தொடர்புகளை கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், இந்த யுவதி தனது காதலன் தொழில் புரியும் கடைக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கிருந்த காதலன் மற்றும் ஏனைய 5 பேர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக யுவதி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

SHARE