LG G Flex 3 அறிமுகம் தொடர்பில் புதிய தகவல் வெளியானது

289

LG நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான G Flex 3 இனை விரைவில் அறிமுகம் செய்ய காத்திருக்கின்றது.

இந் நிலையில் குறித்த கைப்பேசி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள புதிய இலத்திரனியல் சாதனங்களை அறிமுகம் செய்து வைப்பதற்கான IFA 2016 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நெகிழ் தன்மை உடைய இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான Quad HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இது தவிர Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் இதில் வழமைக்கு மாறாக விசேட கமெராக்கள் தரப்பட்டுள்ளன.

அதவாது 16 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்களை உடைய இரண்டு பிரதான கமெராக்களும், 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெராவும் தரப்பட்டுள்ளது.

இக் கைப்பேசி தொடர்பான ஏனைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

SHARE