பேஸ்புக்கே உலகம்ணு இருக்கீங்களா? அப்போ இது உங்களுக்கு தான் பாஸ்!

267

தற்போது உள்ள காலக்கட்டத்தில் இணையம் என்பது முக்கியமான தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது.

எப்போதும் காபியில் தொடங்கும் காலை பொழுது தற்போது இணையத்தில் தான் தொடங்குகிறது.

இணையத்தில் பல பயனுள்ள தளங்கள் இருந்தாலும் சமூகவலைதளங்கள் அனைவரையும் கட்டிக் போட்டுள்ளது.

அந்த வகையில் பேஸ்புக் சமூக வலைதளம் அனைவரின் அன்றாட வேலைக்கும் முட்டுக் கட்டை போடும் வகையில் உள்ளது.

தற்போது பலரும் இதற்கு அடிமையாகி கிடைக்கும் இந்த நிலையில், அதனை எந்த வகையில் பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

மின்னஞ்சல் அறிவிப்புகள் (Email Notifications)

உங்கள் ஈ-மெயிலில் பேஸ்புக் தொடர்பான Notifications அனைத்தையும் ஆப் செய்து கொள்ளுங்கள். இதனால் பிறந்த நாள், லைக்ஸ், கமெண்ட் என எந்தவித பேஸ்புக் அறிவிப்பும் உங்களை தொந்தரவு செய்யாது. நீங்கள் மற்ற முக்கியமான வேலைகளை பார்க்கலாம். இதற்கு, வரும் மெயிலில் Unsubscribe என்பதை கொடுப்பதன் மூலம் Notificationsஐ ஆப் செய்ய முடியும்.

நேரத்தை எல்லைப்படுத்துதல் (Time-Limiter Plug-in)

குறிப்பிட்ட நேரம் மட்டுமே பேஸ்புக் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தாலும் அதன்படி இருக்க முடியாது. அதனால், நீங்கள் Google Chrome பயன்படுத்தினால் Stayfocusd என்ற Extension பயன்படுத்தி கொள்ளலாம். இது குறிப்பிட்ட நேரம் மட்டும் இணையதளங்களில் நேரத்தை செலவிட அனுமதிக்கும். இதனால் நீண்ட நேரம் நீங்கள் பேஸ்புக்கில் மூழ்கி கிடக்க முடியாது.

தனிப்பட்ட பேஸ்புக் குரூப்ஸ் (Private Facebook Groups)

உங்களது பேஸ்புக் பதிவுகளை முடிந்தவரை குறிப்பிட்ட எல்லையில் வைத்துக் கொள்ளுங்கள். இதற்காக தனிப்பட்ட பேஸ்புக் குரூப்ஸ் பயன்படுத்தலாம். பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இது பயன்படுத்தலாம்.

தேவையற்ற செயல்கள் வேண்டாம்

உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருக்கும் அனைவரின் பிறந்த நாளுக்கும் வாழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் வாழ்த்தினால் போதும். இதனால் தேவையில்லாதவர்கள் பழக்கங்களை தவிர்க்க முடியும். அதனால் நேரம் விரையம் ஆவதையும் தடுக்கலாம்.

தகவல் பகிர்வில் கவனம் வேண்டும்
தகவல் பகிர்வில் கவனம் வேண்டும்

நீங்கள் எப்போது இறப்பீர்கள்? நீங்கள் எந்த வயதில் கோடீஸ்வரர் ஆவீர்கள்? என்பது போன்ற பல அப்பிளிகேஷனை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இதனால் உங்களது தகவல்கள் திருடு போக வாய்ப்பு உள்ளது. புகைப்படம், வீடியோ போன்றவற்றை பரிமாறிக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நண்பர்கள் பட்டியல் (Friends List)
நண்பர்கள் பட்டியல் (Friends List)

நண்பர்கள் பட்டியலை நீடித்துக் கொள்வதால் பேஸ்புக் நிறுவனம் எந்த ஒரு பரிசும் கொடுக்கப் போவதில்லை. முடிந்த அளவு முக்கியமான நண்பர்களை மட்டும் நண்பர்கள் பட்டியலில் வைத்துக் கொள்ளுங்கள். இது பல பிரச்சனையை தவிர்க்க பயன்படும்.

தேவையற்றதை தூக்கிவிடுங்கள் (Hide Post Icon)
தேவையற்றதை தூக்கிவிடுங்கள் (Hide Post Icon)

தேவையில்லாதவர்கள் பதிவேற்றும் புகைப்படங்களால் உங்களது பேஸ்புக் பக்கம் நிரம்பி வழிந்தால் Hide Post Icon மூலம் அனைத்தையும் தூக்கிவிடுங்கள். இது உங்கள் தலைவலியை குறைக்கும்.

குரூப் (Group) சவகாசம் வேண்டாம்
குரூப் (Group) சவகாசம் வேண்டாம்

தேவையில்லாமல் குரூப் போன்றவற்றில் சேராதீர்கள். இதனாலே தேவையற்றவர்களின் தொல்லை ஏற்படும். உங்களுக்கு தேவை என்ற போது மட்டும் சில பயனுள்ள குரூப் போன்றவற்றில் இணைந்து கொள்ளலாம்.

SHARE