கணணி ஹேம் பிரியர்களை இணைக்கும் யூடியூப்பின் புதிய சேவை

319

யூடியூப் நிறுவனம் வீடியோக்களை பகிர்ந்து மகிழும் சேவையை வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே.

இது தவிர முப்பரிமாண வீடியோக்கள், நேரடி நிகழ்ச்சிகளை 360 டிகிரியில் கண்டு மகிழுதல் போன்ற சேவைகளையும் வழங்கி வருகின்றது.

தற்போது இவற்றையெல்லாம் தாண்டி ஹேம் பிரியர்களுக்காக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி உலகெங்கிலும் உள்ள ஹேம் பிரியர்கள் யூடியூப்பில் இணைந்து நேரடியாக ஹேம் விளையாடி மகிழ முடியும்.

இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒன்லைன் ஊடாக தெரியப்படுத்தக்கூடிய வசதியும் தரப்படவுள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள இவ் வசதியின் ஊடாக E3 2016 நிகழ்வும் காண்பிக்கப்படவுள்ளது.

இச் சேவையினை https://gaming.youtube.com/e3 எனும் இணையத்தள முகவரியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே

SHARE