Apple iPhone 6S, Samsung Galaxy S7 போன்களை கீழே போட்டால் என்ன ஆகும்?

272

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

Apple iPhone 6S, Samsung Galaxy S7 ஸ்மார்ட் போன்களின் தரத்தை மதிப்பீடு செய்ய ஒரு வினோதமான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதாவது இந்த ஸ்மார்ட் போன்கள் தரையில் தவறி விழும் போது எந்த அளவு உறுதித்தன்மையை கொண்டுள்ளது என்பதை காண்பிக்கும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு போன்களின் அனைத்துப் பகுதியும் தரையில் விழும்படி இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதில் Apple iPhone 6S உடன் ஒப்பிடும் போது Samsung Galaxy S7 ஸ்மார்ட் போன், அடிப்பக்கம் மட்டுமே உறுதி தன்மையுடன் உள்ளது. ஆனால் பின்பக்கம், தொடுதிரை ஒரு முறை கீழே விழுந்தால் பலத்த சேதம் அடைகிறது.

அதேசமயம் Apple iPhone 6S அனைத்து சோதனையிலும் அதிக சேதத்தை சந்திக்கவில்லை. மேலும், 5 முறை கீழே விழுந்தால் மட்டுமே போனின் தொடுதிரை செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

இதற்கு முன்னதாக Samsung Galaxy S7, HTC 10 போன்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட சோதனையில் HTC 10 ஸ்மார்ட் போனே சிறந்ததாக உள்ளது. 34 முறை கீழே போட்ட பிறகு தான் HTC 10 தொடுதிரையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.

SHARE