ஏசர் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

290

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ஏசர் (Acer) நிறுவனம் புதிய கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

Acer Liquid Zest Plus எனும் இக் கைப்பேசி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை கடந்த மாதமே வெளியிட்டிருந்த அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இந் நிலையில் எதிர்வரும் ஜுலை மாதம் அளவில் முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்ய வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

5.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்ட இக் கைப்பேசியானது Quad Core MediaTek MT6735 Processor இனைக் கொண்டுள்ளது.

தவிர பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளதுடன், சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரிக்க முடியும்.

மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் விலையானது 200 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

SHARE